உறுப்பியல் 'சுருக்கமில்'

7

 
னச்சோலை சூழ்ந்த பொதியமலையில் எழுந்தருளி யிருக்கின்ற அரிய தவத்தினையுடைய
முதலாசிரியராகிய அகத்தியமுனிவரால் அருளிச்செய்யப்பட்ட அழிவின்றி நிலைபெற்ற
முத்தமிழுள் இயற்றமிழின் கூறாகிய யாப்பிலக்கண நூலை, யானும் அவாவினால் எனது
புல்லிய நாவைக் கொண்டு சொல்லத் தொடங்கினேன். இது அறிவிலியாகிய எனக்கே
நகையினை வினைக்குமாயின். குறை வில்லாத அறிவினை உடையவர்க்கு யாதாகுமோ!
எ - று.]
 
     ஏ : அசைநிலை. இழிவுசிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. 'யானா
நடாத்துகின்றேன்' என்பதற்கு வேறு பொருள் கூறுவாரும் உளர்.
 

இதுவுமது

  3. (1) சுருக்கமில் கேள்வித் துகடீரி புலவர்முன் யான்மொழிந்த
பருப்பொரு டானும் விழுப்பொரு ளாம்பனி மாலிமயப்
பொருப்பகஞ் சேர்ந்தபொல் லாக்கருங் காக்கையும்பொன்னிறமாய்
இருக்குமென் றிவ்வா றுரைக்குமன் றோவிவ் விருநிலமே.
 
     இ - கை. புலவரது சிறப்புணர்த்திய முகத்தான் அவை யடக்க முணர்த்.... று.
 
     [இ - ள். பனிதோய்ந்த நெடிய (2) இமயவரை இடத்தைச் சேர்ந்த இழிவாகிய
கரிய காக்கைப்புள்ளும் (3) பொன்னிறம் உற்றிருக்கும் என்று பரந்த இவ்வுலகத்தவர்
சொல்வர். இவ்வாறே குற்றந் தீர்ந்த அளவில்லாத நூற்கேள்வியை யுடைய புலவர்க்கு
முன் குற்றமுடைய அறிவில்லாத யான் கூறிய சிறப்பில்லாத பிண்டப்பொருளும். சிறந்த
நுண் பொருள் ஆம். எ-று.
 
     அன்று, ஓ, ஏ, அசைநிலை.]
 

(3)


     (1) சுருக்க மில் கேள்வி - பரந்த கேள்வி யறிவு. துகள் - குற்றம், பருப்பொருள் -
தூலாப் பொருள் ; சிறப்பில்லாதது இது ; 'பதர்ச் சொற் பருப்பொருள் பன்னுபு நீக்கிப்,
பொருட்சொன் னிரப்பும் புலவர்' (பெருங். 2. 4 ; 51-2) மால் - பெருமை. பொருப்பு -
மலை.

     (2) இமயமலையைப் பொன்மலை என்றல் மரபு : 'பொற்கோட்டிமயம்', 'பொன்படு
நெடுங்கோட் டிமயம்' (புறநா. 2. 24, 39 : 14-5) ; 'புள்ளி மால்வரை பொன்னென
நோக்கி' (கம்ப. ஆற்றுப். 4.)

     (3) இமயம் சேர்ந்த காக்கை பொன்னிறம் பெறும் : 'கனக மலையருகே, போயின
காக்கையு மன்றே படைத்தது பொன்வண்ணமே' பொன் வண்ணத். 100)