செய்யுளியல் 'ஈரடி வெண்பாக்'

71

 
பங்களுள், செப்பலோசைத்தாய், ஈற்றடி முச்சீராய், ஏனையடி நாற் சீராய், வெண்சீரும்
இயற்சீரும் வந்து வெண்டளை தட்டு, வேற்றுத் தளை விரவாது, காசு, பிறப்பு, நாள்,
மலர் என்னும் வாய்பாட்டால் இறும் வெண்பாவினை (1) அடியானும் ஓசையானுந்
தொடையானும் 2பெயர் வேறுபாடுணர்த்துவான் எடுத்துக்கொண்டார்.
 
     அவற்றுள் இக்காரிகை குறள்வெண்பாவும், இருகுறள் நேரிசை வெண்பாவும்,
ஆசிடை நேரிசை வெண்பாவும் ஆமா றுணர்த்....று.
 
     ஈரடி வெண்பாக் குறள்' எ - து. இரண்டடியால் வரும் வெண்பா குறள்வெண்பா
எனப்படும் எ - று. (2) என்னை?
 
  'தொடையொன்றடியிரண் டாகி வருமேற்
குறளின் பெயர்க்கொடை கொள்ளப் படுமே'
 
என்றார் காக்கை பாடினியாரும் எனக் கொள்க.
 

வரலாறு

  உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து.'

(குறள், 667)
 

  'உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.'

(குறள், 395)
 

     இவை இரு (3) விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வந்த குறள் வெண்பா.
 
     'குறட்பா இரண்டாய் இடைக்கட் சீரிய வான்றனிச் சொல்லடி மூஉய்ச்
செப்பலோசை குன்றாது ஓரிரண்டாயும் ஒரு விகற்பாயும் வருவதுண்டேல்
நேரிசையாகும்' எ - து. இரண்டு குறள் வெண்பாவாய் நடுவு முதற்றொடைக்கேற்ற
தனிச் சொல்லால்
 

     (1) அடியாற் பெயர் பெற்றவை குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா. ஓசையாற்
பெயர் பெற்றவை நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, தொடையாற் பெயர்பெற்றது
பஃறொடை வெண்பா.

      (2) இதற்குமுன் 'அவை இனக்குறள் வெண்பாவும் விகற்பக் குறள் வெண்பாவும்
என இரண்டாம் 'என்ற தொடர் ஒரு பிரதியிற் காணப்படுகின்றது. இனக்குறள் வெண்பா
என்பது ஒருவிகற்பத்தால் வருவது.

     (3) விகற்பம் - இங்கே எதுகை வேறுபாடு.
 


     (பி - ம்.) 2. வேறுபாடுணர்த்.