72

யாப்பருங்கலக் காரிகை

 
     அடி நிரம்பிச் செப்பலோசை வழுவாது முதலிரண்டடியும் ஒரு விகற்பமாய்க்
கடையிரண்டடியும் மற்றொரு விகற்பாய் வரினும் நான்கடியும் ஒரு விகற்பாய் வரினும்
அவை இருகுற ணேரிசை வெண்பா எனப்படும். எ - று. என்னை?
 
  'குற்றிய லுகர 3முதற்குறள் வெண்பா
முற்றி னிருகுற ணேரிசை யாகும்'
 
என்றார் ஆகலின்.
 

வரலாறு

  '(4) தடமண்டு தாமரையின் றாதா டலவன்
இடமண்டிச் செல்வதனைக் கண்டு - பெடைஞெண்டு
பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந்
தூழி நடாயினா னூர்.'

'(5) அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே
பெரிய வரைவயிரங் கொண்டு - தெரியிற்
கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார்
பெரிய வரைவயிரங் கொண்டு.'
     இவை இரண்டு குறள் வெண்பாவாய் நடுவு முதற்றொடைக் கேற்ற
தனிச்சொல்லால் அடிநிரம்பிச் செப்பலோசை வழுவாது இருவிகற்பத்தானும் ஒரு
விகற்பத்தானும் வந்தமையால் இருகுற ணேரிசை வெண்பா.
 
     வான் றனிச் சொல்' என்று சிறப்பித்தவதனால் முதற் குறட்பாவினோடு
தனிச்சொல் இடை வேறுபட்டு விட்டிசைப் பின், ஒற்றுமைப்படாத உலோகங்களை
ஒற்றுமைப்படப் (6) பற்றாசிட்டு விளக்கினாற்போல, முதற் குறட்பாவின் இறுதிக்
 

     (4) தடம் - குளம். தாது - பூந்தாது. அலவன் - ஆண் நண்டு. பூழிக், கதவு -
புழுதியாகிய கதவு. பெடை புலந்து கதவடைத்தது. ஊழிநடாயினான் - ஊழிக்காலம்வரை
ஆணை செலுத்துபவன்.

      (5) வரைகீண்டு - மலையைக் கல்லிப் பெயர்த்து. வரை வயிரம் - வயிரம் பற்றிய
மூங்கில்.

      (6) பற்றாசு - பொற்கொல்லர் நகைகளுக்கு இடும் பொடி; இராசி எனவும் படும்.
 

      (பி - ம்.) 3. விறுதி முதற்குற, ளுற்றிடி னிருகுற ணேரிசை வெண்பா.