74

யாப்பருங்கலக் காரிகை

 
வஞ்சியேன் வஞ்சியே னென்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ.'
 
     இவை முதற் குறட்பாவின் இறுதிக்கண், முறையே ஓரசை, யானும் ஈரசையானும்
ஆசிட்டு ஒரு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசை வெண்பா.
 
     'நெரிசுரி பூங்குழல் நேரிழையே' எ - து. மகடூஉ முன்னிலை.
 
     'வெண்பா வகவல் கலிப்பா அளவடி' என்னுங் காரிகையுள் வெண்பாச்
செப்பலோசையால் வருமெனக் கூறி, ஈண்டுச் செப்ப லோசை குன்றாதென்றது கூறியது
கூறிற்றாகாது; அஃது ஒரு சார் பிறபாக்களைத் தத்தம் உதாரண வாய்பாட்டால்
ஓசையூட்டும் பொழுது தத்தம் ஓசையிற் சிறிது வழுவி வருவனவும் உளவாயினும்,
வெண்பாச் செப்பலோசையிற் சிறிதும் வழுவலாகாதென்பது யாப்புறுத்தற்
பொருட்டாகவும், செப்பலோசையிற் சிறிது வழுவி வந்த நேரிசை இன்னிசை
வெண்பாக்களை ஒரு புடை ஒப்புமை நோக்கி வெண்டுறைப்பாற்படுத்து வழங்கினும்
இழுக்காதென்பது அறிவித்தற்கும் எனக் கொள்க. என்னை?
 

 
'கூறியது கூறினுங் குற்ற மில்லை
வேறொரு பொருளை விளக்கு மாயின்'
 
என்றார் ஆகலின்.
 
  'தத்தம் பாவினத் தொப்பினுங் குறையினும்
ஒன்றொன் றொவ்வா வேற்றுமை வகையாற்
பாத்தம் வண்ண மேலா வாகிற்
பண்போல் விகற்பம் பாவினத் தாகும்'

'குறட்பா விரண்டடி நால்வகைத் தொடையான்
முதற்பாத் தனிச்சொலி னடிமூஉ யிருவகை
விகற்பி 6னடப்பி னேரிசை வெண்பா'
 
என்றார் அவிநயனார்.
 
  'இரண்டா மடியி னீறொரூஉ வெய்தி
முரண்ட வெதுகைய தாகியு மாகா
 

     (பி - ம்) 6. நடத்த னேரிசை.