வும் எல்லாம் இன்னிசை வெண்பா என்று பெயரிட்டு வழங்கப்படும் எ - று. |
| '(5) அங்கண் விசும்பி னகனிலாப் பாரிக்குந் திங்களுஞ் சான்றோரு மொப்பர்மற் - றிங்கண் மறுவாற்றுஞ சான்றோரஃ தாற்றார் தெருமந்து தேய்வ ரொருமா சுறின்.' |
(நாலடி, 151.) |
| '(6) மலிதேரான் கச்சியு மாகடலுந் தம்மில் ஒலியும் பெருமையு மொக்கும் - மலிதேரான் கச்சி படுவ கடல்படா கச்சி கடல்படுவ வெல்லாம் படும்,' |
இவை இரண்டாமடியின் இறுதி தனிச்சொற் பெற்று மூன்று விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா. |
| 'வளம்பட ................... செய்தாரு மில்.' |
(கா. 22, மேற்.) |
இது மூன்றாமடியின் இறுதி தனிச்சொற் பெற்று இரண்டு விகற்பத்தான் வந்த இன்னிசை வெண்பா. |
| '(7) மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும் தவமிலா ரில்வழி யில்லைத் தவழும் அரசிலா னில்வழி யில்லை யரசனும் இல்வாழ்வா ரில்வழி யில்.' (நான்மணி. 48.) |
இஃது அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்று நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட்டு வந்த இன்னிசை வெண்பா. |
பிறவும் வந்தவழியே கண்டுகொள்க. |
| 'தனிச்சொற் றழுவல வாகி விகற்பம் பலபல தோன்றினு மொன்றே வரினும் இதன்பெய ரின்னிசை யென்றிசி னோரே' |
|
(5) பாரிக்கும் - பரப்பும். தண்ணளியே பாரித்தலால் சான்றோரும் அன்னர். மன்: மிகுதிப்பொருளில் வந்த இடைச்சொல். தெருமந்து - மயங்கி, (6) கச்சியில் கடல்படு திரவியமேயன்றி வேறு நிலங்களின் பொருள்களும் உள என்றபடி. (7) சில பிரதிகளில் இச்செய்யுளுக்குப் பிரதியாக 'இன்னாமை வேண்டி......வெகுளிவிடல்' (நான்மணி. 17.) என்ற செய்யுளும், 'இஃது அடிதோறும் தனிச்சொற் பெற்றுவந்த இன்னிசை வெண்பா' என்ற தொடரும் காணப்படுகின்றன. |