78

யாப்பருங்கலக் காரிகை

 
'ஒருவிகற் பாகித் தனிச்சொ லின்றியும்
இருவிகற் பாகித் தனிச்சொ லின்றியுந்
தனிச்சொற் பெற்றுப் பலவிகற் பாகியுந்
தனிச்சொ லின்றிப் பலவிகற் பாகியும்
அடியடி தோறு மொரூஉத்தொடை யடைநவும்
எனவைந் தாகு மின்னிசை தானே'
 
என்றார் பிறருமெனக் கொள்க.
      'அடிபலவாய்ச் சென்று நிகழ்வது பஃறொடையாம்' எ - து நான்கடியின் மிக்க
பலவடியால் வருவது பஃறொடை வெண்பா எனப்படும் எ - று.
 
     நேரிசை வெண்பாவிற்கும் இன்னிசை வெண்பாவிற்கும் நான்கடியே உரிமை
சொன்னமையால் 'நான்கடியின் மிக்க வடியான் வருவது' என்பது (8) ஆற்றலாற் போந்த
பொருளெனக் கொள்க.
 
'வையக மெல்லாங் கழனியா வையகத்துச்
செய்யகமே 4நாற்றிசையின் றேயங்கள் செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு வான்கரும்பின்
சாறேயந் நாட்டுத் தலையூர்கள் சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாங் கட்டியுட்
டானேற்ற மாய சருக்கரை மாமணியே
ஆனேற்றான் கச்சி யகம்'
 
     இஃது அடிதோறும் ஒரூஉத்தொடை பெற்றுப் பல விகற்பத்தால் வந்த ஏழடிப்
பஃறொடை வெண்பா.
 
  '(9) சேற்றுக்கா னீலஞ் செருவென்ற வேந்தன்வேல்
கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல்'
 

     (8) ஆற்றலாற் போந்த பொருள் - புத்தி நுட்பத்தினாற் கொண்ட பொருள்;
'செய்வேனோ என்பது வினாதல்; இவ்வோகார இடைச் சொற்கு எதிர்மறை முதலிய
பொருள் விலக்கி ஆற்றலால் வினாப் பொருளே கொள்க' (நன். சூ. 386, சங்கர)

      (9) மாவடர்கண் - மாவடுவைப் பொருத கண். ஆற்றுக்கால் ஆட்டியர் -
மருதநிலப் பெண். ஆட்டியர் மாவடர் கண்கள் நீலம் வேல் பகழி கயல் இவைகளோடு
தோற்றம் தொழில் வடிவு தடுமாற்றம் என்னும் இவைகளில் ஒத்தன.
 

     (பி - ம்.) 4. நாற்றிசையுட் டேயங்கள்