செய்யுளியல் 'ஒன்றும் பலவும்ழு

79

 
தோற்றந் தொழில்வடிவு தம்முட் டடுமாற்றம்
வேற்றுமை யின்றியே யொத்தன 6மாவடர்
ஆற்றுக்கா லாட்டியர் கண்.ழு
 
     இஃது 7ஐந்தடியான் ஒரு விகற்பத்தான் வந்த பஃறொடை வெண்பா.
 
'(10) பன்மாடக் கூடன் மதுரை நெடுந்தெருவில்
என்னோடு நின்றா ரிருவ ரவருள்ளும்
பொன்னோடை நன்றென்றா ணல்லளே பொன்னோடைக்
கியானைநன் றென்றாளு மந்நிலையள் யானை
எருத்தத் திருந்த விலங்கிலைவேற் றென்னன்
றிருத்தார்நன் றென்றேன் றியேன்.ழு
 
     இஃது ஆறடியான் வந்த பலவிகற்பப் பஃறொடை வெண்பா.
 
     ஏழடியின் மிக்க பஃறொடை வெண்பா யாப்பருங்கலவிருத்தி யுள்ளும்
தேசிகமாலை முதலியவற்றுள்ளும் கண்டு கொள்க.
 
     'அடிபலவாய் நிகழ்வதுழு என்னாது, அடி பலவாய்ச் சென்று நிகழ்வதுழு என்று
சிறப்பித்தவதனால், செப்பலோசையிற் சிறிது வழுவி வந்த பஃறொடை வெண்பாக்களை
ஒருபுடை ஒப்புமை நோக்கி வெண்கலிப்பாற் படுத்து வழங்கினும் இழுக்காதெனக்
கொள்க.

      'சிறை வண்டினங்கள் துன்றுங் கரு மென் குழற் றுடி ஏர் இடைத் தூமொழியேழு
எ - து. மகடூஉ முன்னிலை.
 
  'தொடையடி யித்துணை யென்னும் வழக்க
முடையதை யன்றி யுறுப்புழி வில்லா
நடையது பஃறொடை நாமங் கொளலேழு
 
என்றார் காக்கைபாடினியாரும் எனக் கொள்க.
 

     (10) உலாப் போந்த தலைவனைக் கண்டு காதல்கொண்ட தலைவியின் கூற்று இது.
அந்நிலையள் - நல்லள் என்றபடி. தார் - மாலை தியேன் - தீயேன் ; குறுக்கல்
விகாரம்.
 

     (பி - ம்.) 6. மரவேடர். 7. ஐந்தடியான் வந்த ஒரு விகற்பம்.