எழுத்து |
| 4. குறினெடி லாவி குறுகிய மூவுயி ராய்தமெய்யே மறுவறு மூவின மைதீ ருயிர்மெய் மதிமருட்டுஞ் சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய் அறிஞ ருரைத்த 1வளபு மசைக்குறுப் பாவனவே. |
இ-கை. மேலதிகாரம் பாரித்த (1) எட்டனுள்ளும் அசைக்கு உறுப்பாம் 2எழுத்துக்களது பெயர் வேறுபாடு உணர்த்....று. |
குறிலாவன : அ இ உ எ ஓ என இவை. என்னை? |
| 'அ இ உ, எ ஒ என்னும் மப்பா லைந்தும் ஓரள பிசைக்குங் குறிறெழுத் தென்ப' |
(தொல். எழுத். சூ. 3.) |
என்றார் ஆகலின். (2) |
நெடிலாவன : ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என இவை. என்னை? |
| 'ஆ ஈ ஊ ஏ ஐ, ஓ ஒள வென்னு மப்பா லேழும் ஈரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப' |
(தொல். எழுத். சூ. 4.) |
என்றார் ஆகலின். |
ஆவியாவன: அகரமுதல் ஒளகார மீறாய்க் கிடந்த பன்னிரண் டெழுத்தும் எனக் கொள்க. ஆவி யெனினும் உயிர் எனினும் 3ஒக்கும். என்னை? |
|
'பொன்னிறப் புறவுங் ககுநிறக் காக்கையும், மன்னுமா லிமய வரைப்புறஞ் சேர்ந்துழி, இருதிறப் பறவைக்கு மொரு திறனல்லதை, நிறம்வேறு தெரிப்ப துண்டோ' (குமர குருபர. 455. 24-7.) (1) எட்டாவன : எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா, இனம் என்பன. (2) 'எகர ஒகரங்கள் புள்ளிபெற் றியலு மென்றார் அகத்தியனார்' என்ற தொடர் பலபிரதிகளில் இங்கே காணப்படுகிறது. வேறு சில பிரதிகளில் இத்தொடர் 'அகரமுதல்' என்ற சூத்திரத்தின் பின் காணப்படுகிறது |
|
(பி - ம்.) 1. வளவு. 2. என்ற எழுத்துக்களது. 3. ஒக்கும், 'ஆவிதானே யுயிரெனப் படுமே' என்றாராகலின். |