செய்யுளியல் 'நேரிசை யின்னிசை'

81

 

வரலாறு

(1) நற்கொற்ற வாயி னறுங்குவளைத் தார்கொண்டு
சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே - பொற்றேரான்
1 பாலைநல் வாயின் மகள்.'

'(2) அறிந்தானை யேத்தி யறிவாங் கறிந்து
2 செறிந்தார்க்குச் செவ்வ னுரைப்ப - 3செறிந்தார்
4 சிறந்தமை யாராய்ந்து கொண்டு.'
 
     இவை இரண்டாமடியின் இறுதி தனிச்சொற் பெற்று இரு விகற்பத்தானும்
ஒருவிகற்பத்தானும் வந்த நேரிசைச் சிந்தியல் வெண்பா.
 
  '(3) சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை.'

'(4) நறுநீல நெய்தலுங் கொட்டியுந் தீண்டிப்
பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி
5பறநாட்டுப் பெண்டி ரடி.'

'(5) முல்லை முறுவலித்துக் காட்டின மெல்லவே
சேயிதழ்க் காந்த டுடுப்பீன்ற போயினார்
திண்டேர் வரவுரைக்குங் கார்.'
 
     இவை மூன்றடியாய்த் தனிச் சொல் லின்றிப் பல விகற்பத் தான் வந்த இன்னிசைச்
சிந்தியல் வெண்பா.
 

     (1) மாலையைக்கொண்டு வண்டினைப் புடைத்தல் : 'கற்பெனு மாலை வீசி
நாணெனுங் களிவண்டோப்பி' (சீவக. 2073.)

      (2) அறிந்தான் - கடவுள். செறிந்தார் - புலமை மிகுந்தவர். செறிந்தார் ஏத்தி
அறிந்து ஆராய்ந்து கொண்டு உரைப்ப.

      (3) சுரை - சுரைக்காய். சுனை - சுரை மிதப்ப அம்மி ஆழ யானைக்கு நிலை
முயற்கு நீத்து என்ப என மாறிக் கூட்டுக.

      (4) பாரி பறநாடு - பாரிவள்ளலின் பறம்பு நாடு. பறம்புநாட்டு மகளிரைப்
பிறநாட்டு மகளிர் வணங்குவர் என்றபடி.

      (5) துடுப்பு - காந்தள் மடல். போயினார் - தலைவியைப் பிரிந்து சென்ற
தலைவர். முல்லை காட்டின, காந்தள் ஈன்ற, கார் போயினார் வரவுரைக்கும்.
 

     (பி - ம்.) 1. மாலைநல். 2. சிறந்தார்க்குஞ். செறிந்தார்க்குஞ். 3. சிறந்தார். 4.
செறிந்தமை. 5. அறநாட்டுப்.