82

யாப்பருங்கலக் காரிகை

 

உதாரண முதனினைப்பு

['நற்கொற்ற வாயி லறிந்தா னையுநறும் பூங்குழலாய்
சொற்பெற்ற நேரிசைச் சிந்திய லாஞ்சுரை யாழவம்மி
நிற்றற் குரிய நறுநீல 6முல்லை முறுவலுமென்
றெற்றப் படாதன வின்னிசைச் சிந்துக் கிலக்கியமே.'
 
     இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே நேரிசைச் சிந்தியல் வெண்பாவிற்கும்
இன்னிசைச் சிந்தியல் வெண்பாவிற்கும் முறையாகக் காட்டிய இலக்கியங்களை
முதனினைத்துக் கொள்க.]
 
     'நிகரில் வெள்ளைக்கு ஓரசைச்சீரும் ஒளிசேர் பிறப்பும் ஒண் காசும் இற்ற
சீருடைச் சிந்தடியே முடிவாம் என்று தேறுகவே' எ-து. எல்லா வெண்பாவிற்கும்
நாளென்னும் நேரசைச் சீரானும், மலரென்னும் நிரையசைச் சீரானும், காசு பிறப்பென்னும்
வாய்பாட்டாற் குற்றியலுகர மீறாகிய நேரீற் றியற்சீரானும் இற்ற முச்சீரடியே
இறுதியாமென்று தெளிக. எ - று.
 
     [வெண்பாவின் இறுதிச்சீர்க்குக் குற்றியலுகரம் ஈறாக வேறு உதாரணம்
எடுத்தோதியதூஉம், மேல் ஓரசைச்சீர்க்கு உதாரணம் வேறுகாட்டிப் போந்ததூஉம் (கா.
7), வெண்பாவினை அலகிட்டு உதாரண வாய்பாட்டான் ஓசையூட்டும்பொழுது பிற
வாய்பாட்டான் ஓசையூட்டலாகாதென்பது அறிவித்தற்கெனக் கொள்க.]
 
  '(6) பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர்.'
(குறள், 1121.)
 
     இது நீர் என்று நாளென்னும் ஓரசைச்சீரான் முடிந்தது.
 
'நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர்.'

(குறள், 1072)
 

     இஃது இலர் என்று மலர் என்னும் ஓரசைச்சீரான் முடிந்தது.
 
  'கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.'

(குறள், 984)
 


     (6) கீழே வரும் 'பாலொடு' முதலிய நான்கு குறட்பாக்களும் இரண்டொரு
பிரதிகளில் உதாரண வாய்பாட்டான் அலகிட்டுக் காட்டப் பெற்றுள்ளன.
 

     (பி - ம்.) 6. நெய்தலு முல்லையுமென்.