இது சால்பு என்று காசென்னும் வாய்பாட்டான் முடிந்தது. |
| 'அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு.' |
இஃது உலகு என்று பிறப்பென்னும் வாய்பாட்டான் முடிந்தது. |
'நிகரில் வெள்ளைக்கு' என்று சிறப்பித்தவதனால் குறள் வெண்பாவினை (7) ஓரடி முக்காலென்றும், சிந்தியல் வெண்பாவினை ஈரடி முக்காலென்றும், நேரிசை வெண்பாவினை நேரிசை மூவடி முக்காலென்றும், இன்னிசை வெண்பாவினை இன்னிசை மூவடி முக்காலென்றும், பஃறொடை வெண்பாவினைப் பலவடி முக்காலென்றும் பெயரிட்டு வழங்குவர் ஒருசா ராசிரியர் எனக் கொள்க. |
'ஒளிசேர் பிறப்பும் ஒண்காசும்' என்று சிறப்பித்தவதனால் காசு பிறப்பு என்னுங் குற்றியலுகர மீறாய் நேரீற்றியற்சீர் முடிவதுபோல முற்றியலுகர மீறாய் நேரீற்றியற்சீர் இறுதியாக வருவனவுமுள ஒருசார் வெண்பா எனக் கொள்க. |
வரலாறு |
| '(8) மஞ்சுசூழ் சோலை மலைநாட மூத்தாலும் அஞ்சொன் மடவாட் கருளு.' |
இது பிறப்பென்னும் வாய்பாட்டான் முற்றிய லுகர மீறாக இற்ற வெண்பா. |
| ' 7 இனமலர்க் கோதா யிலங்குநீர்ச் சேர்ப்பன் புனைமலர்த் தாரகலம் புல்லு.' |
இது காசென்னும் வாய்பாட்டான் முற்றியலுகர மீறாக இற்ற வெண்பா. |
இவை செய்யுளியலுடையார் காட்டியவெனக் கொள்க. |
|
(7) நான்கு சீர்களாலான அடியை அளவாகக் கொண்டு மூன்று சீர்களாலான வெண்பாவின் ஈற்றடியை முக்கால் என்றார். (8) இஃது ஒம்படை. |
|
(பி - ம்.) 7. இனை, |