| 'செப்ப லிசையன வெண்பா மற்றவை யந்தடி சிந்தடி யாகலு மவ்வடி யந்த மசைச்சீ ராகவும் பெறுமே' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 57.) |
| [மாவாழ் புலிவாழ் சுரமுள வாக மணியிறுவாய் ஓவா தளபெடுத் தூஉங் கெழூஉ முதாரணமாய் நாவார் பெரும்புகழ் நத்தத்தர் யாப்பி னடந்ததுபோல் தேய்வா முகரம்வந் தாலியற் சீருக்குச் செப்பியதே. |
இக்காரிகைச் சூத்திரத்துள் ஓசையூட்டுதற் கருத்தாவது : 'மாவாழ்சுரம்' 'புலிவாழ்சுரம்' என்னும் வஞ்சியுரிச்சீ ரிரண்டும் உளவாகவைத்து, ஒரு பயனோக்கித் தூஉமணி. கெழூஉமணி என்றளபெடுத்து நேர்நடுவாகிய வஞ்சியுரிச்சீர்க்கு உதாரணம் எடுத்துக் காட்டினார் நத்தத்தனார் முதலாகிய ஒருசா ராசிரியர். அதுபோல இந்நூலுடையாரும் தேமா, புளிமா என்னு மிரண்டு நேரீற் றியற்சீரு முளவாக. வெண்பாவின் இறுதிச்சீருக்கு உதாரண வாய்பாட்டான் ஓசையூட்டுதற் பொருட்டாகக் குற்றியலுகரம் ஈறாகிய காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டான் நேரீற்றியற்சீ ரீறாக வேறு உதாரண மெடுத்தோதினார் எனக் கொள்க.] (5) |
- - - - |
வெண்செந்துறை, குறட்டாழிசை |
| 26. அந்தமில் பாத மளவிரண் டொத்து முடியின்வெள்ளைச் செந்துறை யாகுந் திருவே யநன்பெயர் சீர்பலவாய் அந்தங் குறைநவுஞ் செந்துறைப் பாட்டி னிழிபுமங்கேழ்ச் சந்தஞ் சிதைந்த குறளுங் குறளினத் தாழிசையே. |
இ.....கை. குறள் வெண்பாவிற் கினமாகிய துறையும் தாழிசையும் ஆமாறுணர்த்....று. |
'அந்தமில் பாதம் அளவிரண்டு ஒத்து முடியின் வெள்ளைச் செந்துறையாகும்' எ - து. இரண்டடியாய்த் தம்முள் அள |