செய்யுளியல் 'அந்தமில் பாத'

85

 
வொத்து வருவது 1வெண்செந்துறை என்றும் செந்துறை வெள்ளையென்றும் பெயரிட்டு
வழங்கப்படும் எ - று.
 
      'அந்தமில் பாதம்' என்று சிறப்பித்தவதனால் (1) விழுமிய பொருளும் ஒழுகிய
வோசையு முடைத்தாய் வருவது எ - று. என்னை?
 
  'ஒழுகிய வோசையி னொத்தடி யிரண்டாய்
விழுமிய பொருளது வெண்செந் துறையே'
 
என்பது யாப்பருங்கலம் (சூ. 63.)
 
வரலாறு
  'ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை.' (முதுமொழிக்.)

'கொன்றை வேய்ந்த செல்வ 2னடியிணை
என்றுமேத்தித் தொழுவோ மியாமே.' (கொன்றைவேந்தன்)
 
     இவை இரண்டடியாய் அளவொத்து ஒழுகிய ஓசையும் விழுமிய
பொருளுமுடைத்தாய் வந்த வெண்செந்துறை.
 
     'திருவே' எ - து மகடூஉ முன்னிலை.
 
     'சீர் பலவாய் அந்தம் குறைநவும் செந்துறைப் பாட்டின் இழிபும் அங்கேழ் சந்தம்
சிதைந்த குறளும் குறளினத் தாழிசையே' எ - து. நாற்சீரின் மிக்க பலசீரால் வந்த அடி
இரண்டாய் ஈற்றடி குறைந்து வருவனவும், செந்துறை வெள்ளையிற் சிதைந்து
வருவனவும், குறள் வெண்பாவிற் சிறிது செப்பலோசை சிதைந்து வருவனவும் குறள்
வெண்பாவிற்கு இனமாகிய குறட்டாழிசை எனப்படும் எ - று.
 
     குறட்டாழிசை எனினும் தாழிசைக் குறள் எனினும் ஒக்கும். இரண்டடி என்பது (2)
அதிகாரத்தான் வருவித்
 

     (1) விழுமிய பொருள் - சிறந்த பொருள். ஒழுகிய ஓசை - தட்டுத லில்லாத சீரிய
ஓசை.

      (2) குறட்பாவின் இனத்தைக் கூறுவது இங்கே அதிகாரம். குறட்பாவுக்கு
அடியிரண்டாயினாற் போல அதன் இனங்கட்கும் இரண்டடியே கொள்ள வேண்டும்
என்பது. அதிகாரம் இன்னதென்பது: (கா. 8. அடிக். 1)
 

     (பி - ம்.) 1. குறள்வெண் செந்துறை. 2. னிணையடி