வரலாறு |
| '(1) கொண்டன் முழங்கினவாற் கோபம் பரந்தனவால் - என்செய்கோயான் வண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால் - என்செய்கோயான் எண்டிசையுந் தோகை 2யியைந்தகவி யேங்கினவால் - என்செய்கோயான், |
இது மூன்றடியாய் அடிதோறும் இறுதிக்கண் 'என்செய் கோயான்' என்னுந் தனிச் சொற் பெற்று வந்த வெளி விருத்தம். |
| '(2) ஆவா வென்றே யஞ்சின 3ராழ்ந்தார் - ஒருசாரார். கூகூ வென்றே கூவிளி கொண்டார் - ஒருசாரார் மாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார் - ஒருசாரார் 4 ஏகீர் நாய்கீ ரென்செய்து மென்றார் - ஒருசாரார்.' |
இது நாலடியாய் அடிதோறும் இறுதிக்கண் 'ஒரு சாரார்' என்னுந் தனிச் சொற் பெற்று வந்த வெளி விருத்தம். |
'வெண்டாழிசையே மூன்றடியாய் வெள்ளை போன்றிறும்' எ - து. மூன்றடியாய் அவற்றின் ஈற்றடி வெண்பாவே போல முச் சீரான் இறுவது வெண்டாழிசை யென்றும், வெள்ளொத்தாழிசை யென்றும் பெயரிட்டு வழங்கப்படும். எ - று. |
| 'அடியொரு மூன்றுவந் தந்தடி சிந்தாய் விடினது வெள்ளொத் தாழிசை யாகும்' |
என்பது யாப்பருங்கலம் (சூ : 66) |
|
(1) கோபம் - இந்திர கோபப் பூச்சி. வரி - இசை. தளவம் - செம்முல்லை. தலைவி பருவங் கண்டு வருந்தியது இது. மூன்றடியான் வந்தமையால் சிந்தியல் வெண்பாவின் இனம் இது. (2) ஆவா இரக்கங் குறித்து வந்தது. கூவிளி - கூப்பீடு. நாய்கீர் - வணிகரே. நான்கடியாய்த் தனிச்சொற் பெற்று வந்தமையால் இது நேரிசை வெண்பாவின் இனம், |
|
(பி - ம்.) 2. யிருந்தகவி, யிசைந்தகவி. 3. ராழாவொரு 4. ஏயீர்நாய்கீர். |