செய்யுளியல் 'மூன்றடி யானு'

89

 

 

வரலாறு

  'நண்பி தென்று தீய சொல்லார்
முன்பு நின்று முனிவ செய்யார்
அன்பு வேண்டு பவர்.'
 

     5இஃது ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை.
 

     'மூன்றிழிபு ஏழு உயர்பாய் ஆன்றடிதாம் சில அந்தங் குறைந் திறும்
வெண்டுறையே' எ-து. மூன்றடிச் சிறுமையாய் ஏழடிப் பெருமையாய் இடையிடை
நான்கடியானும் ஐந்தடியானும் ஆறடி யானும் வந்து, பின்பிற் சிலவடி சிலசீர்
குறைந்துவருவன வெண் டுறையாம் எ - று.
 
     'ஆன்றடிதாம்' என்று சிறப்பித்தவதனால் முன்பிற் சிலவடி ஓரோசையாய்ப்
பின்பிற் சிலவடி மற்றோர் ஓசையாய் வருவனவும் உள. அஃது ஒரு சார் வேற்றொலி
வெண்டுறை எனக் கொள்க.
 
  'மூன்றடி முதலா வேழடி காறும்வந்
தீற்றடி சிலசில சீர்தப நிற்பினும்
வேற்றொலி விரவினும் வெண்டுறை யாகும்'
 
என்பது யாப்பருங்கலம் (சூ - 67.)
 

வரலாறு

  (3) குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலை மேற்பாய
அழலெரியின் மூழ்கினவா லந்தோ வளியவென் றயல்வாழ் மந்தி
கலுழ்வனபோ 6னெஞ்சழிந்து கல்லருவி தூஉம்
நிழல்வரை நன்னாட 7னீப்பானோ வல்லன்.'
 

     (3) இசைய - இசையையுடைய கோழ்இலைய - வழுவழுப்பான இலைகளையுடைய.
அழல் எரி - அழலுகின்ற தீ. அளிய - இரங்கத்தக்கன. காந்தள் மலரை மந்திகள்
தீயென்று மயங்கின. நான்கடி வெண்டுறையாதல் பற்றி இது இன்னிசை வெண் பாவின்
இனம். ஐந்தடி முதலாக ஏறிய அடிகளையுடைய வெண்டுறைகள் பஃறொடை
வெண்பாவின் இனம்.
 

     (பி - ம்.) 5. இது மூன்றடியாய் ஆசிரியத் தளையால் வந்து சிந்தியல் வெண்பாவிற்
சிதைந்தமையால் வெண்டாழிசை. பிறவும் வந்தவாறு கண்டு கொள்க. 6. நெஞ்சசைந்து,
7. நிற்பானோ