| (3) அகரமுத லௌகார விறுவாய்ப் பன்னீ ரெழுத்து முயிரென மொழிப' |
என்றார் ஆகலின். |
குறுகிய மூவுயிராவன : குற்றியலிகரமும் குற்றிய லுகரமும் ஐகாரக் குறுக்கமும் என இவை. [என்னை? |
| 'அவைதாம், குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும் ஆய்த மென்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ ரன்ன' |
என்றார் ஆகலின்.] இவை மேலே சொல்லுதும். |
ஆய்தமென்பது அஃகேனம். அஃகேனம் எனினும், ஆய்தம் எனினும், தனிநிலை எனினும், புள்ளி எனினும், ஒற்றெனினும் ஒக்கும். என்னை? |
| 'அஃகேன மாய்தந் தனிநிலை புள்ளி ஒற்றிப் பால வைந்து மிதற்கே' |
என்றார் ஆகலின். |
வரலாறு |
எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு எனவரும். (5) என்னை? |
| 'குறியதன் முன்ன ராய்தப் புள்ளி உயிரொடு புணர்ந்தவல் லாறன் மீசைத்தே' |
|
என்றார் ஆகலின். |
(தொல். எழுத். சூ. 38.) |
மெய்யாவன : ககர முதல் னகர ஈறாய்க் கிடந்த பதினெட் டெழுத்தும் எனக் கொள்க. என்னை? |
|
(3) 'அகரமுதல்' என்ப சில சுவடிகளில் இல்லை; தொல். எழுத். சூ. 8 அங்ஙனமே அமைந்துள்ளது. (4) ஒரு பிரதியில் 'என்றார் மயேச்சுரர்' என்று காணப்படுகிறது. இஃது அவிநயனார் சூத்திரம் என்று கூறுவர் : யா. வி. சூ. 2. மேற். (5) இதன் பின் சில பிரதிகளில் 'அதுவும் சார்பிற் றோன்றும்' எழுத்து; |