இது நான்கடியாய் ஈற்றடி யிரண்டும் இவ்விருசீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை. |
| ' (4) தாளாள ரல்லாதார் தாம்பலராயக்கா லென்னா மென்னாம் யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும் பீலிபோற் 8சாய்த்துவிடும் பிளிற்றி யாங்கே.' |
இது மூன்றடியாய் ஈற்றடி யிரண்டும் இவ்விருசீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை. |
| ' (5) முழங்குதிரைக் கொற்கைவேந்தன் 9முழுதுலகும் புரந்தளித்து முறைசெய் கோமான் வழங்குதிறல் வாண்மாறன் மாச்செழியன் றாக்கரிய வைவேல் பாடிக் 10 கலங்கிநின் றாரெலாங் கருதலா காவணம் இலங்குவா ளிரண்டினா லிருகைவீ சிப்பெயர்ந் தலங்கன்மா லையவிழ்ந் தாடவா டும்மிவள் 11 பொலங்கொள்பூந் தடங்கட்கே புரிந்துநின் றாரெலாம் விலங்கியுள் ளந்தப விளிந்துவே றாபவே.' |
இஃது ஏழடியால் முதலிரண்டடியும் அறுசீராய் ஓரோசையாய், பின்பில் ஐந்தடியும் நாற்சீராய் வேற்றோசையாய் வந்த வேற்றொலி வெண்டுறை. ஐந்தடியானும் ஆறடியானும் வருவன யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க. |
| 'மூன்றடி யாய்வெள்ளை போன்றிறுந் தாழிசை மூன்றிழிபேழ் ஆன்றடி தாஞ்சில வந்தத் தடிக ளவைகுறைந்து தோன்றுந் துறைவெள்ளை தண்டா விருத்தந் தனிச்சொல்வந்து மூன்றடி யானு முடியு முடியுமோர் நான்கினுமே' |
என்று வெண்பாவுக்கினமாகிய தாழிசை துறை விருத்தங்கட்கு முறையானே இலக்கணஞ் சொல்லாது தலை தடுமாற்றமாகக் காரிகை சொல்லவேண்டியது என்னையோவெனின், ஒருசார் வெண்டுறையின் ஈற்றடி ஒன்றொரு சீர் குறைந்து வருவனவுள |
|
(4) தாளாளர் - முயற்சியுடையோர். பீலி - மயிலிறகு. (5) தடம் கட்கே - விசாலமான கண்களுக்கே. புரிந்து - விரும்பி. இச் செய்யுள் கலம்பகத்துள் மதங்கு என்ற உறுப்பைச் சாரும். |
|
(பி - ம்.) 8. சாய்ந்துவிடும் பிலிற்றி. 9. முழுதுலகு மேவல் செய். 10. கலந்து நின். 11. புலங்கொள். |