வென்பதூஉம், வெள்ளொத் தாழிசையின் முதலிரண்டடியும் நாற்சீரான் வருமென்பதூஉம், சிந்தியல் வெண்பா ஒரு பொருண்மேல் மூன் றடுக்கி வருவனவெல்லாம் வெள்ளொத் தாழிசை யென்ப தூஉம் அறிவித்தற்கெனக் கொள்க, 'தலைதடு மாற்றந் தந்துபுணர்ந் துரைத்தல்' என்பது தந்திர வுத்தி யாகலின். |
| '(6) வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும் உறவுற வரும்வழி யுரைப்பன 12வுரைப்பன்மற் செறிவுறு தகையினர் சிறந்தன ரிவர்நமக் கறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின் பிறபிற நிகழ்வன பின்.' |
இஃது ஐந்தடியாய் ஈற்றடி ஒன்றொருசீர் குறைந்து வந்த ஓரொலி வெண்டுறை. |
வெள்ளொத் தாழிசையின் முதலிரண்டடியும் நாற்சீரானே வருவது 'நண்பிதென்று' என்னும் இலக்கியத்தே கண்டுகொள்க. |
| (7) 'அன்னா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி ஒன்னா ருடைபுறம் போல நலங்கவர்ந்து துன்னான் துறந்து விடல் 'ஏடி யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி கூடா ருடைபுறம் போல நலங்கவர்ந்து 13 நீடான் துறந்து விடல் 'பாவா யறங்கொ னலங்கிளர் சேட்சென்னி மேவா ருடைபுறம் போல நலங்கவர்ந்து காவான் துறந்து விடல்.' |
இவை சிந்தியல் வெண்பா வொருபொருண்மேல் மூன்றடுக்கி வந்தமையால் வெள்ளொத் தாழிசை. |
|
(6) உறவு உற வரும் வழி - நேயங்கொள்ளும் விதம். செறிவுறு - நெருங்கிப் பழகும். அரசர் முதலாயினாரிடம் பழகும் முறை கூறப்படுகிறது. (7) சேட் சென்னி - ஒரு சோழன். ஒன்னார், கூடார், மேவார் என்பன பகைவரைக் குறிக்கும் சொற்கள். புறம் - இடம். ஏடி - தோழி; விளி, சேட்சென்னி கவர்ந்து துறந்துவிடல் அறங்கொல். |
|
(பி - ம்.) 12. வுரைப்பன் யான். 13. நாடான், நேடான். |