92

யாப்பருங்கலக் காரிகை

 
'ஈரடி முக்கா லிசைகொள நடந்து
மூன்றுட னடுக்கித் தோன்றினொத் தாழிசை'
     
என்றார் மயேச்சுரரு மெனக் கொள்க.
 

உதாரண முதனினைப்பு

  [(8) கொண்டன் முழங்கின வாவா விருத்தங் குழலிசைய
வண்டினம் வெண்டுறை தாளாண் முழங்கொடு தாழிசையே
நண்பிதென்றார் கலி கொன்றைவெண் செந்துறை நீலநண்ணு
பிண்டி யறுவர்வண் 14டார்குறட் டாழிசை பெய்வளையே.
 

     இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே வெண்பா வினங் கட்குக் காட்டிய
இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.] (7)
 

 
     (8) 'வெறியுறு கமழ்கண்ணி' என்பதும், அன்னா யறங்கொல்' என்பதும்
இவ்வுதாரண முதனினைப்புக் காரிகையில் இல்லை. முதலிற் கூறவேண்டிய குறள்
வெண்பா வினத்தின் முதற்குறிப்புப் பின்னே கூறப்பட்டுள்ளது.
 

----

நால்வகை ஆசிரியப்பா

  28. கடையயற் பாதமுச் சீர்வரி னேரிசை காமருசீர்
இடைபல குன்றி னிணைக்குற ளெல்லா வடியுமொத்து
நடைபெறு மாயி னிலைமண் டிலநடு வாதியந்தத்
தடைதரு பாதத் தகவ லடிமறி மண்டிலமே.
 
     எ - து. அகவலோசையோ டளவடித்தாகியும், இயற்சீர் பயின்றும் அயற்சீர்
விரவியும், தன்றளை தழுவியும் பிறதளை மயங்கியும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர்
வருதலில்லா ஆசிரியப் பாவினை (1) அடியானுந் தொடையானும் ஓசையானும்
பொருளானும் பெயர் வேறுபாடுணர்த்துவா னெடுத்துக்கொண்டார். அவற்றுள்.
இக்காரிகை நேரிசை யாசிரியப்பாவும், இணைக்குற ளாசிரியப்பாவும், நிலைமண்டில
வாசிரியப்பாவும், அடிமறிமண்டில வாசிரியப்பாவு மாமாறுணர்த்....று
 

     (1) அடியாற் பெயர்பெற்றது இணைக்குற ளாசிரியப்பா ; தொடையாற்
பெயர்பெற்றது அடிமறிமண்டில வாசிரியப்பா ; ஓசையாற் பெயர் பெற்றது நேரிசை
யாசிரியப்பா ; பொருளாய் பெயர் பெற்றது. நிலைமண்டில வாசிரியப்பா. மண்டிலம் -
நாற்சீரைக்கொண்ட அடி ; தொல். பொருள். 427.
 

     (பி - ம்.) 14 டார் வெறி தாழிசை.