செய்யுளியல் 'கடையயற் பாதமுச்'

93

 
     'கடை அயல் பாதம் முச்சீர் வரின் நேரிசை' எ - து. 1ஈற்றடி யின் அயலடி
முச்சீரான் வரும் எனின் அது நேரிசை யாசிரியப்பா எனப்படும் எ - று. என்னை?
 
 

'(2) அந்த வடியி னயலடி சிந்தடி
வந்தன நேரிசை யாசிரி யம்மே'
 

என்பது யாப்பருங்கலம் (சூ. 71).
 

வரலாறு

  (3) 'நிலத்தினும் பெரிதே வானினு முயர்ந்தன்று
நீரினு மாரள வின்றே சாரற்
கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே.' (குறுந். 3)
     இஃது 2ஈற்றடியின் அயலடி முச்சீரான் வந்தமையால் நேரிசை யாசிரியப்பா வெனக்
கொள்க.
 
     'காமரு சீர் இடை பல குன்றின் இணைக்குறள்' எ - து. முதலடி யும் ஈற்றடியும்
ஒத்து இடையடிகள் 3இரண்டும் பலவும் ஒருசீர் குறைந்தும் இருசீர் குறைந்தும் வருவன
(4) இணைக்குறளா சிரியப்பா எனப்படும் எ - று. என்னை?
 
  'அளவடி யந்தமு மாதியு 4மாகிக்
குறளடி சிந்தடி 5யென்றாங் கிரண்டும்
இடைவர நிற்ப திணைக்குற ளாகும்'
 
என்றார் காக்கை பாடினியார்.

     (2) பல பிரதிகளில் இப்பகுதி. 'ஈற்றதனயலடி யொருசீர் குறைந்து, நிற்பது நேரிசை
யாசிரியம்மே என்றாராகலின்' என்று காணப்படுகிறது. 'ஒருசீர் குறைந்து' என்பதற்கு,
'முச்சீராக' என்பது பிரதிபேதம்.

      (3) நீர் - கடல். ஆர் அளவின்று - அருமை அளவின்று. சாரல் - மலைப்
பக்கம். கோல் - கொம்புகள். தேன் இழைக்கும் - தேனைச் செய்யும்.

      (4) நாற்சீரினும் குறைந்த சீரையுடைய சிந்தடியையும் குறளடியையும் இங்கே
குறள் என்றார். இணை - இரண்டு. இணைக்குறள் - குறளடியும் சிந்தடியுமாகிய இரண்டு.
 

     (பி - ம்.) 1. ஈற்றயலடி. 2. ஈற்றயலடி. 3. ஒருசீரும் இருசீரும் குறைந்து வருவன.
4. மாகக். 5. யென்றா விரண்டும்.