94

யாப்பருங்கலக் காரிகை

 
      'இணைக்குற ளிடைபல குறைந்திற லியல்பே' என்பது யாப்பருங்கலம் (சூ. 72).
 

வரலாறு

(5) 'நீரின் றண்மையுந் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சார னாடன் கேண்மை
சாரச் சாரச் சார்ந்து
தீரத் தீரத் தீர்பொல் லாதே.'
 

     இது முதலடியும் ஈற்றடியும் நாற்சீராய் இடையடி இருசீரானும் முச்சீரானும்
வந்தமையால் இணைக்குறளாசிரியப்பா.
 

 

'[சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே
பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன் மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சோனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்றவன்
அருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப், பாடுநரு மில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
சூடாது வைகி யாங்குப் பிறர்க்கொன்
றீயாது வீயு முயிர்தவப் பலவே.'

(புறநா. 235)
 

     இஃது இருசீரடியும் முச்சீரடியும் இடையிடை வந்தமையால் இணைக்குற
ளாசிரியப்பா.]
 

     (5) தீர்பு ஒல்லாது - விடுதல் இயலாது.