'காமரு சீர்' என்று சிறப்பித்தவதனால் ஆசிரியப்பா நான்கிற்கும் ஏ என்னும் அசைச்சொல்லால் இறுவது சிறப்புடைத்து, பிறவெழுத்தானும் 6இறப்பெறு மாயினும் எனக் கொள்க. |
| 'அகவ லிசையன வகவல் மற்றவை ஏஓ ஈஆய் என்ஐயென் றிறுமே' (யா. வி. சூ. 67.) |
7 என்றாராகலின். |
'எல்லாவடியும் ஒத்து நடைபெறுமாயின் நிலைமண்டிலம்' எ - து. எல்லாவடியும் தம்முள் ஒத்து நாற்சீரடியான் வருவது நிலைமண்டில வாசிரியப்பாவாம் எ - று. |
வரலாறு |
| ' (6) வேரல் வேலி வேர்க்கோட் பலவின் சார னாட செவ்வியை யாகுமதி யாரஃ தறிந்திசி னோரே சாரற் சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.' |
(குறுந். 18.) |
இஃது எல்லாவடியும் ஒத்து நான்குசீரான் வந்தமையால் நிலைமண்டில வாசிரியப்பாவெனக் கொள்க. |
நிலைமண்டில வாசிரியப்பாவிற்கு என் என்னும் அசைச் சொல்லால் இறுவது சிறப்புடைத்து, மற்றொருசார் ஒற்றினானும் உயிரினானும் இறப்பெறுமாயினும் எனக் கொள்க. |
| 'ஒத்த வடித்தா யுலையா மரபொடு நிற்பது தானே நிலைமண் டிலமே' 'என்னென் கிளவி யீறாப் பெறுதலும் அன்னவை பிறவு மந்த நிலைபெற நிற்கவும் ªÚà நிலைமண் டிலமே' |
என்றார் காக்கை பாடினியார். |
'நடு ஆதி அந்தத்து அடைதரு பாதத்து அகவல் அடிமறி மண்டிலமே' எ - து. எல்லாவடியும் ஒத்து முதல் நடு விறுதி |
|
(6) வேரல் - மூங்கில். பலவு - பலாமரம். செவ்வியை ஆகுமதி - வரைந்து கொள்ளும் பருவத்தை உடையையாகுக. |
|
(பி - ம்.) 6. இறப்பெறுமெனக். 7. என்றார் காக்கை பாடினியார். |