யாக உச்சரித்தாலும் ஓசையும் பொருளும் பிழையாது வருவது அடிமறிமண்டில வாசிரியப்பாவும் எ - று. |
| (7) 'மனப்படு மடிமுத லாயிறின் மண்டிலம்' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 73.) |
| ''உரைப்போர் குறிப்பி னுணர்வகை யின்றி இடைப்பான் முதலீ றென்றிவை தம்முண் மதிக்கப் படாதன மண்டில யாப்பே' |
என்றார் காக்கை பாடினியாரும் எனக் கொள்க. |
வரலாறு |
| (8) சூரல் பம்பிய சிறுகா னியாறே சூரர மகளி ராரணங் கினரே வார லெனினே யானஞ் சுவலே சார னாட நீவர லாறே.' |
இஃது எல்லா வடியும் முதல் நடுவிறுதியாக வுச்சரிக்க ஓசையும் பொருளும் பிழையாது வந்தமையால் அடிமறி மண்டில வாசிரியப்பாவாம் எ - று. |
| [நேரிசை யாகு நிலத்தினு மென்ப திணைக்குறட்பா 8நீரின்றண் ணென்னு நிலைமைய தாநிலை மண்டிலப்பா வேரலென் றாகும் விரைமலர்க் கோதைவில் லேர்நுதலாய் சூரல்பம் பென்ப தடிமறி 9யாகத் துணிந்தனரே. |
இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே ஆசிரியப்பா நான் கிற்குங் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.] |
(8) |
|
(7) இச்சூத்திரம் சில பிரதிகளில், 'மனப்படு மடிமுத லாயிறின் மண்டிலம், நிலைக்குரி மரபி னிற்கவும் பெறுமே' என்று காக்கைபாடினியார் வாக்காகக் காணப்படுகிறது. (8) சூரல் - காலைச் சுற்றிக்கொள்ளத்தக்க சூரற்கொடி; பிரம்பு. சூரர மகளிர் - தெய்வப் பெண்கள். ஆரணங்கினர் - மிகுதியாகத் தாக்கி வருத்தக் கூடியவர், ஆறு - வழி. |
|
(பி - ம்.) 8. நீரின் சிறிய நிலைமைய. 9. மண்டிலந் தூமொழியே. |
---- |