| 'கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த 8மாயவன் எல்லிநம் மானுள் வருமே லவன்வாயின் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ.' |
(சிலப். ஆய்ச்.) |
இவை மூன்றடியாய்த் தம்முள் அளவொத்து ஒரு பொருண் மேல் மூன்றடுக்கி வந்த ஆசிரியத் தாழிசை. |
| '(3) வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை நீனிற வண்ணநின் 4னிரைகழ றொழுதனம்.' |
இது தனியே வந்த ஆசிரியத் தாழிசை. |
[சீர் வரையறுத்திலாமையால் எனைத்துச் சீரானும் மூன்றடியாய் வரப்பெறும்.] |
'நான்கடியாய் (4) எருத்தடி நைந்தும் இடை மடக்காயும். இடையிடையே சுருக்கடியாயும் துறையாம்' எ - து. நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவனவும், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவனவும், நான்கடியாய் இடையிடை குறைந்து வருவனவும், நான்கடியாய் இடையிடை குறைந்து இடைமடக்காய் வருவனவும், ஆசிரியத்துறை எனப்படும் எ - று. |
'நான்கடியாய்' என்பதனை எல்லாவற்றோடுங் கூட்டியும், இடைமடக்கு என்பதனை (5) இருதலையுங் கூட்டி மத்திம தீபமாக்கியும் பொருளுரைத்துக் கொள்க. |
சீர் வரையறுத்திலாமையால் எனைத்துச் சீரானும் அடியாய் வரப்பெறும் எனக் கொள்க. |
|
(3) பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை - சந்திரனை - உண்டுபண்ணி அவனைக்கொண்டு பல உயிர்களைக் காப்பாற்றினை; சந்திரன் திருமாலிடம் தோன்றினமை: 'எங்கண் மாதவ னிதயமா மலர்வரு முதயத் திங்கள்' (வி. பா. குருகுலச்) 1. சந்திரன் ஓஷதிகளையும் உயிர்களையும் வளர்ப்பவன். (4) எருத்தடி - ஈற்றயலடி. எருத்தடி நைந்து வரும் துறை நேரிசை யாசிரியப்பாவின் இனம். (5) இருதலையும் கூட்டலாவது : 'எருத்தடி நைந்து,' 'இடையிடையே சுருக்கடியாயும்' என்ற இரண்டனோடுங் கூட்டுவது.' |
|
(பி - ம்.) 3. மாமாயன் 4. னிருகழ. |