கணம்பிறங்கக் கைக்கொண்டார் பிணம்பிறங்கப் பெயர்த்திட்டன்று . (இ - ள்.) நிரைத்திரட்சி பெருக்கக் கைப்பற்றின கரந்தையார்தம் பிணம் பெருக்க வெட்சியார் கெடுத்தது எ-று. (வ - று.) 1சூழ்ந்த நிரைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார் வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணியத் - தாழ்ந்த குலவுக் கொடுஞ்சிலைக்கைக் கூற்றனையா ரெய்த புலவுக் கணைவழிபோய்ப் புள். (இ - ள்.) வெட்சியார் வளைந்துகொண்ட நிரை மீளச் சூழ்ந்து கிட்டின கரந்தையார் பட்டு வீழ்ந்தார்; வீழ்ந்தவருடைய தசையைத் தின்ன வேண்டிப் படிந்தன, வளைந்த கொடியவில்லாற் சிறந்த கையினையுடைய கூற்றத்தையொப்பார் எய்த புலால் நாறும் அம்பு போன வழியே போய்ப் பறவைகள் எ-று. (10)
1.தொல். புறத். சூ. 3, இளம். மேற். |