103. 1காந்தள்
கருங்கடலுண் மாத்தடிந்தான்
2செழுங்காந்தட் சிறப்புரைத்தன்று.

(இ - ள்.) கறுத்த கடலிடத்துச் சூரபன்மாவைக் கொன்றவனுடைய காந்தட்பூவின் மிகுதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
3குருகு பெயரிய குன்றெறிந் தானும்
உருகெழு காந்தண் மலைந்தான்-பொருகழற்
4கார்கருதி வார்முரச மார்க்குங் கடற்றானைப்
போர்கருதி யார்மலையார் பூ.

(இ - ள்.) குருகின் பெயர்பெற்ற மலையை எறிந்தவனும் அழகு மருவின கோடலைச் சூடினான்; வீரக்கழலினையுடைத்தாய் மேகத்தையொத்து வாராற் பிணித்த முரசுமுழங்குங் கடல்போன்ற சேனையிடத்துப் பூசலை நினைந்து யாவர் சூடார் பூவினை? எ-று.

குருகு பெயரிய குன்று-கிரவுஞ்சகிரி.

(9)

1. தொல். புறத். சூ. 5. இத்துறையை அகப்புறமென்பார்; யா-வி.
2. காந்தட்பூ : முருகு. 43 - 4.
3. மணி. 5 : 13.
4. பு - வெ. 127.