107. குற்றுழிஞை
1கருதாதார் மதிற்குமரிமேல்
ஒருதானாகி யிகன்மிகுத்தன்று

(இ - ள்.) பகைவர் அரணாகிய அழிவில்லாததன்மேல் தான் ஒருவனுமேயாகி மாறுபாட்டினைப் பெருக்கியது எ-று.

(வ - று.)
குளிறு முரசினான் கொண்டா னரணம்
களிறுங் கதவிறப் பாயிந்த-ஒளிறும்
அயிற்றுப் படைந்த 2வணியெழு வெல்லாம்
3எயிற்றுப் படையா லிடந்து.

(இ - ள்.) அதிரும் வீரமுரசினையுடையான் வென்று கைப்பற்றினான் குறும்பினை; போர்யானைகளும் வாய்தலிற் கதவு ஒடியப் பாய்ந்தன; விளங்கும் வேல்வலிசிறந்த நிரைத்த கணைய முழுதும் மருப்பாயுதத்தாலே பெயர்த்து எ-று.

(13)

1. "வணங்காதார் மதிற்குமரி" பு.வெ.122.
2. புறநா.14:2.
3. எயிற்றுப்படை:சீவக.2164