முரணிவியச் சினஞ்சிறந்தோர் அரணகத்தோரை யமர்வென்றன்று (இ - ள்.) மாறுபாடு கெடக் கோபமிக்க உழிஞையார் எயிலினுள் நொச்சியாரைப் போரை வென்றது எ-று. (வ - று.) செங்கண் மறவர் சினஞ்சொரிவாள் சென்றியங்க அங்கண் விசும்பி னணிதிகழும்-திங்கள் முகத்தா ரலற முகிலுரிஞ்சுஞ் சூழி அகத்தாரை வென்றா ரமர். (இ - ள்.) சிவந்த கண்ணினையுடைய வீரர், செற்றத்தைப் பொழியும் வாள்போய் உலாவ அழகிய இடத்தையுடைய ஆகாயத்தின் அலங்கார மிகும் மதியையொத்த வதனத்தினையுடையார் கூப்பிட மேகந்தவழும் நெற்றியினையுடைய அரணினுள்ளோரைப் போர்வென்றார் எ-று. (22) |