வார்வலந்த துடிவிம்ம ஊர்புகல நிரையுய்த்தன்று. (இ - ள்.) வாராலே கட்டின துடி கறங்க ஊரினுள்ளார் விரும்ப ஆனிரையை மன்றத்திடத்துச் செலுத்தியது எ-று. (வ - று.) 1தண்டா விருப்பின டன்னை தலைமலைந்த வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று - கண்டாள் அணிநிரை வாண்முறுவ லம்மா வெயிற்றி 2மணிநிரை மல்கிய மன்று. (இ - ள்.) தணியாத உவகையினையுடையளாகித் தன்னுடைய சுவாமி தலையிலே சூடின வண்டுநிறைந்த நறுநாற்றம் வீசும் மாலை வாழ்வதாகவென்று நோக்கினாள், அலங்காரமுடைத்தாக ஒழுங்குபட்டு ஒளிவிடா நின்ற பல்லினையும் அழகிய பெருமையினை முடைய மறத்தி, மணியணிந்த பசுமிக்க மன்றத்தை எ - று. எயிற்றி கண்டாளெனக் கூட்டுக. (13)
1. தொல். புறத். சூ. 3, இளம். மேற். 2. புறநா. 387 : 24. |