விலங்கமருள் வியலகலம் வில்லுதைத்த கணைகிழிப்ப நிலந்தீண்டா வகைப்பொலிந்த நெடுந்தகை நிலையுரைத்தன்று. (இ - ள்.) பகையைத்தடுக்கும் பூசலிடத்து அகன்ற மார்பகத்தை வில் உமிழ்ந்த அம்புபிளப்ப நிலத்தைத் தீண்டாதபடி சிறந்த பெரிய மேம்பாட்டினை உடையான்றனது நிலைமையைச் சொல்லியது எ-று. (வ - று.) வெங்கண் முரச திரும் வேலமருள் வில்லுதைப்ப எங்கு மருதத் 1திடைக்குளிப்பச் - செங்கட் புலவா ணெடுந்தகை பூம்பொழி லாகம் கலவாமற் காத்த கணை. (இ - ள்.) வெவ்விய கண்ணினையுடைய முரசு முழங்கும் வேற்போருள் விற்செலுத்த உயிர்நிலையான எவ்விடத்தும் தைப்பச் சிவந்த கண்ணினையும் புலால் நாறும் வாளினையு முடையனாகிப் பெரிய தகைமையாற் சிறந்தவன் பொலிவுபெற்ற பார்மடந்தை மார்பினைக் கூடாதபடி, ஏற்றுக் கொண்டன அம்பு எ-று. வில்லுதைப்பத் தைத்துருவின அம்பு காத்தவென்க. (23)
1. திடைகுளிப்ப |