வெண்கண்ணியுங் கருங்கழலும் செங்கச்சுந் தகைபுனைந்தன்று. (இ - ள்.) வெள்ளைமாலையினையும் வலிய வீரக்கழலினையும் சிவந்த கச்சினையும் அழகிதாக அணிந்தது. எ-று. வெண்கண்ணி-கொத்தான்வாகை. (வ - று.) அனைய வமரு ளயில்போழ் 1விழுப்புண் இனைய வினிக்கவலை யில்லை - புனைக அழலோ டிமைக்கு மணங்குடைவாண் மைந்தர் கழலோடு 2பூங்கண்ணி கச்சு. (இ - ள்.) அத்தன்மையவாகிய பூசலிலே வேல்பிளந்த சீரிய புண் இத்தன்மையவாயின; மேல் ஓர் துயரம் இல்லை; அணிக, நெருப்போடிலங்கும் பகைவர்க்கு வருத்தஞ் செய்தலுடைய வாண்மள்ளர், வீரக்கழலினையும் பொலிந்த மாலையினையும் கச்சினையும் எ-று. (2)
1. குறள்.776. 2. (பி-ம்) 1. பூங்கண்ணிக்கச்சு |