160. களவேள்வி
அடுதிற லணங்கார
விடுதிறலான் களம்வேட்டன்று.

(இ - ள்.) கொல்லும் வலியினையுடைய பேய் வயிறார உண்ணப் பரந்த வலியினையுடையான் களவேள்வி வேட்டது எ-று.

(வ - று.)
பிடித்தாடி யன்ன பிறழ்பற்பே யாரக்
கொடித்தானை மன்னன் கொடுத்தான்-1முடித்தலைத்
தோளொடு வீழ்ந்த 2தொடிக்கை துடுப்பாக
மூளையஞ் சோற்றை முகந்து.

(இ - ள்.) பலுவையொத்த பிறழ்ந்த எயிற்றினையுடைய பேயுண்ணக் கொடியினையுடைய சேனைமன்னவன் வழங்கினான்;மகுடத்தலையாகிய மிடாவில் தோளுடனே வெட்டுண்டு வீழ்ந்த தோள்வளையாற் சிறந்த கையே துடுப்பாக மூளையாகிய அழகிய சோற்றை முகந்து எ-று.

(6)

1. சிலப்.26.242-3.புறநா.26:10;மதுரைக்.34-5.