செறுதொழிலிற் சேணீங்கியான் அறுதொழிலு மெடுத்துரைத்தன்று. (இ - ள்.) பொல்லாத வினையினின்றும் நீளக் கழிந்தவனுடைய ஆறு செய்தியும் உயர்த்திச் சொல்லியது எ-று. (வ - று.) 1உழுது பயன்கொண் டொலிநிரை யோம்பிப் பழுதிலாப் பண்டம் பகர்ந்து-முழுதுணர ஓதி 2யழல்வழிபட் டோம்பாத வீகையான் ஆதி வணிகர்க் கரசு. (இ - ள்.) உழுது அதன் பலத்தைக் கைப்பற்றி ஆரவாரிக்கும் ஆனிரையைப் பாதுகாத்துக் குற்றமில்லாத கூலங்களையும் விற்று நான்மறை முதலாயின பலவும் அறியக் கற்று முத்தீயை ஆராதித்துப் பொருளைச் சீர்தூக்காது கொடுக்கும் கொடையினையுடையான் முதல் வணிகர் எல்லார்க்கும் வேந்து எ-று. (10)
1. தொல்.புறத்.சூ.16,இளம்.மேற்;நன்.சூ.341,மயிலை.மேற். 2. யழல்வழிவேட்டு |