மேன்மூவரு மனம்புகல வாய்மையான் 1வழியொழுகின்று. (இ - ள்.) முற்பட்ட அந்தணர் அரசர் வணிகரென்னும் மூவரும் நெஞ்சு விரும்ப மெய்ம்மையால் அவரவர் ஏவல்வழியே சென்றது எ-று. (வ - று.) மூவரு நெஞ்சமர முற்றி யவரவர் ஏவ லெதிர்கொண்டு மீண்டுரையான்-ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள் உழுவா 2னுலகுக் குயிர். (இ - ள்.) முன்சொன்ன மூவரும் மனம்மேவ முதிர்ந்து அவர் தாந்தாம் ஏவின காரியத்தை ஏற்றுக்கொண்டு மீண்டும் மறுத்துச்சொல்லான் தனக்கு நீதிநூல் ஏவினசொல் வழுவானாய் முறையேநின்று சுரும்பு நிறையும் கழனியுள் உழுமவன்,பூமியிலுள்ளார்க்கெல்லாம் உயிரை அனையவன் எ-று. (11)
1. வழிமொழிந்தன்று 2. உலகிற்கு |