174. கணிவன் முல்லை
துணிபுணருந் தொல்கேள்விக்
கணிவனது புகழ்கிளந்தன்று.

(இ - ள்.) நிச்சயித்துப் பலவுமறியும் பழைய கேள்விஞானத்தினையுடைய சோதிடநூல் வல்லவனது கீர்த்தியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
12புரிவின்றி 3யாக்கைபோற் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங் கறியத் - திரிவின்றி
விண்ணிவ் வுலகம் விளைக்கும் விளைவெல்லாம்
கண்ணி யுரைப்பான் கணி .

(இ - ள்.) தப்பாதபடி தன் உடம்புபோலே பரிகரிக்கக்கடவ நூல்களைப் பலகாலுங் கற்று அடிப்படுத்தித் துன்பமின்றி உண்மையுணரத் தப்பின்றிச் சுவர்க்கம் இப்புவி உண்டாக்கும் நிகழ்ச்சியெல்லாம் கருதிச்சொல்லுமவன் சோதிடவன் எ-று.

(20)

1. தொல். புறத். சூ. 16, இளம். மேற்.
2. புரிவின்றித் தன்யாக்கைபோற்றுவ
3. ஆசார. 96.