காவல் கண்ணிய கழலோன் கைதொழும் மூவரி லொருவனை யெடுத்துரைத் தன்று. (இ - ள்.) பூமியைக்காத்தல்கருதிய வீரக்கழல்வேந்தன் கைகூப்பும் அரி அயன் அரனென்னும் மூவருள் ஒருவனை உயர்த்துச் சொல்லியது எ-று. (வ - று.) 1வைய மகளை யடிப்படுத்தாய் வையகத்தார் உய்ய உருவம் வெளிப்படுத்தாய் - வெய்ய அடுந்திற லாழி யரவணையா யென்றும் நெடுந்தகை நின்னையே யாம் (இ - ள்.) நிலமகளைச் சீபாதத்திலே அடக்கியருளினை, ஞாலத்துள்ளார் பலரும் பிழைப்பத் திருமேனியைத் தோற்றுவித்தருளினை, வெவ்விதான கொல்லும்வலியாற் சிறந்த சக்கரத்தினையும் பாம்பணை யினையுமுடையாயென்றும் சொல்லுவம்; ஒருவராலும் அளத்தற்கரிய தன்மையினையுடையாய், நின்னை யாங்கள் எ - று. (3)
1. தொல். புறத் சூ. 22, இளம் மேற். |