அண்ண னான்மறை யந்தணா ளர்க்குக் கண்ணிய கபிலை நிலையுரைத் தன்று . (இ - ள்.) தலைமையாற்சிறந்த நான்கு வேதத்தினையுமுடைய அந்தணர்க்குக் கொடுக்கக் கருதிய பசுவினது முறைமையைச் சொல்லியது எ-று. (வ - று.) 1பருக்காமுஞ்செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக் குருக்கட் 2கபிலை கொடுத்தான் - செருக்கோ டிடிமுரசத் தானை யிகலிரிய வெங்கோன் கடிமுரசங் 3காலை செய. (இ - ள்.) பருத்தமணியும் சிவந்தபொன்னும் அந்தணர் முகந்து கொள்ள நிறத்த கண்ணினையுடைய பசுக்களைத் தானம்பண்ணினான் களிப்போடு , இடிபோல் முழங்கும் முரசினையுடைய மாற்றார்சேனை மாறுபாடு கெட எம்முடைய நாயகன், காவன்முரசம் நாட்காலையிலே முழங்க எ-று. (14)
1. தொல். புறத். சூ. 29 இளம். மேற். 2. பெருங். 1.39 : 64-9. 3. காலைச்செய் . |