பெருநல்லா னுழையீராகெனப் பொருநனை யாற்றுப்படுத்தன்று. (இ - ள்.) மிக்க நன்மையினையுடையவன் பக்கத்தீராவெனக்கிணைகொட்டுமவனை வழிப்படுத்தது எ-று. (வ - று.) தெருவி லலமருந் தெண்கட் 1டடாரிப் பொருவில் பொருநநீ செல்லிற்- செருவில் அடுந்தடக்கை நோன்றா ளமர்வெய்யோ னீயும் நெடுந்தடக்கை யானை நிரை. (இ - ள்.) தெருவிலே சுழன்று திரியும் தெளிந்த கண்ணால் மலிந்த கிணையினையுடைய ஒப்பில்லாத பொருநனே, நீ போவாயாகிற் பூசலிடத்துக் கொல்லும் பெரியகையினையும் வலிய தாளினையுமுடைய போரை விரும்புவோன் வழங்குவன்; உயர்ந்த பெரிய கையினையுடைய களிற்றின் நிரையை எ-று. (30)
1. மதுரைக்.99-102,ந + பதிற் .57: 6,உரை. |