பூண்முலையார் மனமுருக வேன்முருகற்கு வெறியாடின்று. (இ - ள்.) ஆபரணத்தினாற் சிறந்த முலையினையுடையார் நெஞ்சு நெகிழ வேலினையுடைய குமரனுக்கு வெறியென்னுங் கூத்தை ஆடியது எ-று. (வ - று.) 1வேண்டுதியா னீயும் விழைவோ விழுமிதே ஈண்டியம் விம்ம வினவளையார்-பூண்டயங்கச் சூலமொ டாடுஞ் சுடர்ச்சடையோன் காதலற்கு வேலனொ டாடும் வெறி. (இ - ள்.) விரும்புதியால் நீயும்; இவ்விருப்பம் சாலச் சீரிது; திரண்டவாச்சியங்கள் ஒலிப்பத் தம்மிற்றாமொத்த தொடியினையுடையார் ஆபாரணமிலங்கச் சூலத்துடனே கூத்தாடும் சோதியான் மிகும் வேணியினை யுடையான் புதல்வனுக்கு வெறியாட்டாளனுடனானும் வள்ளிக் கூத்தை எ-று. வெறி வேண்டுதியால் நீயுமென்க. (41)
1. தொல். புறத் . சூ.21, இளம் .மேற். |