கலவா மன்னர் கண்ணுறு ஞாட்பிற் புலவேல் வானவன் பூப்புகழந் தன்று. (இ - ள்.) பொருந்தா வேந்தர் கிட்டின பூசலிடத்துப் புலால் நாறும் வேலினையுடைய சேரன் சூடும் பூவைப் புகழ்ந்தது எ-று. (வ - று.) 1குடையலர் காந்தட்டன் கொல்லிச் சுனைவாய்த் 2தொடையவிழ் தண்குவளை சூடான் - புடைதிகழும் தேரதிரப் பொங்குந் திருந்துவேல் வானவன் போரெதிற் போந்தையாம் பூ. (இ - ள்.) குடைபோன்மலரும் கோடலையுடைய தன்கொல்லிமலைச் சுனையிடத்துக் கட்டலரும் குளிர்ந்த செங்கழுநீர்ப்பூவை மலையான்; பக்கம் விளங்கும் பகைவர் தேர்த்தானை நடுங்கக் கோபிக்கும் திருந்திய வேலையுடைய சேரன், பூசல் தோற்றிற் பனந்தோடாம், அவன் சூடும் பூ எ-று. (1)
1. தொல். புறத். சூ. 5, இளம். மேற் 2. தொடையளி |