244. ஏழகநிலை
ஏழக மூரினு மின்ன னென்றவன்
தாழ்வி லூக்கமொடு தகைபுகழ்ந் தன்று.

(இ - ள்.) ஏழகத்தகரினை மேற்கொண்டு செலுத்தினும் இத்தன்மையனென்று அவனுடைய குற்றமில்லாத மனவெழுச்சியோடு மிகுதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
எம்மனை யாமகிழ 1வேழக மேற்கொளினும்
தம்மதி 2றாழ்வீழ்த் திருக்குமே - தெம்முனையுள்
மானொடு தோன்றி மறலுங்கா லேழகத்
தானொடு நேரா மரசு .

(இ - ள்.) எம்முடைய இல்லிடத்து யாங்கள் பிரியப்பட ஏழகத்தையேறினும் , தம்முடைய அரணிடத்துத் தாழ்கோத்திருக்கும் , பகைப்புலத்துக் குதிரைமிசையே தோற்றிப் போரைச் செய்யுங்காலத்துக் கிடாயின்மேல் அமைந்தானொடு செலவாம், அரசு எ-று.

(5)

1. மேழகம்
2. றாள்