1வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ உட்குவரத் தாக்கி 2யுறழ்செருப் புரிந்தன்று. (இ - ள்.) வெட்சியாரைக் கிட்டிச் சூழ்ந்து அஞ்சத்தாக்கி எடுப்பும் சாய்ப்புமான பூசலை மேற்கொண்டது எ-று. (வ - று.) 3புலிக்கணமுஞ் சீயமும் போர்க்களிறும் போல்வார் வலிச்சினமு மானமுந் தேசும் - ஒலிக்கும் அருமுனை வெஞ்சுரத் தான்பூசற் கோடிச் செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து. (இ - ள்.) புலியினதுதிரளும் சிங்கமும் போர்பொரும் யானையு மொப்பார், வலிமிக்க சீற்றமும் அபிமானமும் பெருமையும்;ஆரவாரிக்கும் கிட்டுதற்கரிய பகைப்புலவழியிலே நிரைகொண்டார் வெட்சியா ரென்னும் ஆரவாரத்தாற் கடுகிப் பூசலைச்செய்தார், கோபமிக்கு எ-று.
சிறந்து செருமலைந்தாரென்க. (4)
1. புறநா.259.உரை,மேற். 2. 'யுளர்செருப்' 3. தொல்.புறத்.சூ.5,இளம்.மேற். |