26. 1புண்ணொடு வருதல்
மண்ணோடு புகழ்நிறீஇப்
புண்ணோடுதான் வந்தன்று.

(இ - ள்.) பூமியுடனே இசையை நிறுத்தி ஆயுதம்பட்ட புண்ணுடனே வீரன்றான் வந்தது எ-று.

(வ - று.)
2வெங்குருதி மல்க 3விழுப்புண் ணுகுதொறூஉம்
இங்குலிகஞ் சோரும் வரையேய்க்கும்-பைங்கண்
இனம்போக்கி நின்றா ரிகல்வாட்டி 4வேந்தன்
மனம்போல வந்த மகன்.

(இ - ள்.) வெவ்விய உதிரம் மிக முகத்தினும் மார்பினும் பட்ட புண்ணினின்றும் விழவிழச் சாதிலிங்கஞ்சொரியும் வரையையொக்கும்; பைங் கண்ணினையுடைய பசுவினத்தை முன்னே செலுத்திநின்ற வெட்சியாருடைய மாறுபாட்டைக்கெடுத்து மன்னன்நெஞ்சினையொப்ப வந்தவீரன் எ - று.

வீரன் இங்குலிகஞ் சோரும் வரையை யொக்குமென்க.

வேந்தன் மனம் வெற்றியையே நினையும்.

(5)

1. தொல். புறத். சூ. 5, இளம். 2. ஒப்பு : களவழி. 7; சீவக. 2239. 3. குறள். 776. 4. நன். சூ. 336, மயிலை. மேற்.