265. இதுவுமது
தவப்பெரிய வெஞ்சமங்குறுகும்
அவற்கிரங்கினு மத்துறையாகும்.

(இ - ள்.) மிகப்பெரிய வெய்ய பூசலிற் பொருந்திய வீரனுக்கு வருந்தினும் முன்பிற்றுறையேயாம் எ-று.

(வ - று.)
இன்னா சொகின மிசையா விரிச்சியும்
அன்னா வலம்வருமென் னாருயிரும்-என்னாங்கொல்
தொக்கார் மறமன்னர் தோலாத் துடிகறங்கப்
புக்கான் விடலையும் போர்க்கு.

(இ - ள்.) இனியவல்ல, நிமித்தமும்; பொருந்துவனவல்ல, நற்டொல்லும்; அன்னே, சுழன்றுவாராநின்றது, என்னுடைய அரிய பிராணனும்; என்னாகவற்றே! திரண்டுநிறைந்த சினவேந்தருடைய வெல்லும் துடிகறங்கத் தலைவனும் பூசலிடத்திற்குத் தலைப்பட்டான் எ-று.

(12)