295. நயத்தல்
கன்னவி றிணிதோட் காளையைக் கண்ட
நன்னுத லரிவை நயப்புரைத் தன்று.

(இ - ள்.) உலக்கல் பழகிய திண்ணிய தோளையுடைய தலைவனைக் கண்ட நல்ல நுதலினையுடைய மடந்தையினது ஆசைப்பாட்டைச் சொல்லியது எ-று.

(வ - று.)
கன்னவி றோளானைக் காண்டலுங் கார்க்குவளை
அன்னவென் கண்ணுக் கமுதமாம் - என்னை
மலைமலிந் தன்ன மார்பம்
முலைமலிந் தூழூழ் முயங்குங் காலே

(இ - ள்.) மலையையொத்த தோளானைக் கண்டேகக் கருங்குவனை யனைய என் கண்ணிற்கு அமிழ்தமாகா நின்றது; எங்ஙனே இருக்குமோ ! வரை பரந்தாலொத்த அகலத்தை முலை விம்மி முறை முறையாகத் தழுவுமிடத்து எ-று.

(2)