303. இதுவுமது
பெய்வளை யவனொடு பேணிய கங்குல்
உய்குவென் வரினென வுரைப்பினு மதுவே.

(இ - ள்.) இட்ட வளையினையுடையாள் தலைவனோடு விரும்பிய இரவுப் பொழுது வரின் பிழைப்பேனெனச் சொல்லினும் அத்துறையாகும் எ-று.

(வ - று.)
தோடவிழ்தார் யானுந் தொடர வவனுமென்
பாடகச் சீறடியின் மேற்பணிய - நாடகமா
வைகிய கங்கு றலைவரின்
உய்குவெ னுலகத் தளியேன் யானே.

(இ - ள்.) இதழ்விரிந்த மாலை செவ்வியழிந்தமை யானும் வினவத்தலைவனும் என்னுடைய பாடகத்தினையுடைய சிற்றடிமேலே வணங்கக் கூத்தாகத் தங்கிய இரவுப்பொழுது இன்னம் கைகூடிற் பிழைப்பேன்; பூமியிடத்து அளியேன் யான் எ-று.

(10)