அஞ்சொல் வஞ்சி யல்லிருட் செலீஇய நெஞ்சொடு புகன்ற நிலையுரைத் தன்று. (இ - ள்.) அழகிய சொல்லினையுடைய வஞ்சிக்கொம்பை ஒப்பாள் இரவுப்பொழுது இருளின்கட் செல்வான்வேண்டி மனத்தோடு விரும்பிய நிலையைச் சொல்லியது எ-று. (வ - று.) மல்லாடு தோளா னளியவாய் மாலிருட்கண் செல்லா மொழிக செலவென்பாய் - நில்லாய் புனையிழை யிழந்த பூசல் நினையினு நினைதியோ வாழியென் னெஞ்சே. (இ - ள்.) மல்லின் செய்தி யுலாவும் புயத்தினையுடையான்றன் அளியை ஆசைப்பட்டு மயக்கமுடைய இருளிடத்துச் செல்லக்கடவே மல்லேம்; நீ தவிர்வாயாக போக்கை என்று சொல்லுவாய்; நீ நில்லாய்; அணிந்த ஆபரணம் சோர்ந்த ஆரவாரத்தை உள்ளுவையோ? உள்ளாயோ? வாழ்வாயாக, எனது நெஞ்சே எ-று. (11) |