307. பின்னிலை முயறல்
முன்னிழந்த நலனசைஇப்
பின்னிலை 1மலைந்தன்று.

(இ - ள்.) தலைவி முன்பு தோற்ற தன் அழகை நச்சி இரந்து பின்னிற்றலை மேற்கொண்டது எ-று.

(வ - று.)
மற்கொண்ட திண்டோண் மறவே னெடுந்தகை
தற்கண்டு 2மாமைத் தகையிழந்த - எற்காணப்
பெய்கள யானைப் பிணரெருத்திற் 3கண்டியான்
கைதொழுதேன் றான்கண் டிலன்.

(இ - ள்.) மற்றொழிலை மேற்கொண்ட திண்ணிய புயத்தினையும் சினவேலினையுமுடைய பெரிய மேம்பாட்டாளன் தன்னைக்கண்டு நிறத்தின் அழகையிழந்த என்னைக்காணச் சொரியும் மதத்தினையுடைய களிற்றினது சருச்சரையாற் பொலிந்த கழுத்தகத்தே கண்டு யான்கையைக் குவித்தேன்; தான் என்னைக் கண்டிலன் எ-று.

(2)

1. மலிந்தன்று.
2. மாமை இழத்தல்: குறுந். 27. 4-5.
3. பு.வெ. 294: 3-4.