மன்மேம் பட்ட மதிக்குடை யோற்குத் தன்மேம் பாடு தானெடுத் துரைத்தன்று. (இ - ள்.) மன்னரின் மேம்பட்ட நிறைமதிபோலும் கொற்றக் குடையினையுடையோற்கு ஒருவீரன் தன்னுடைய மேம்பாட்டைத் தான் உயர்த்திச் சொல்லியது எ-று. (வ - று.) 1ஆளமர் வெள்ளம் பெருகி னதுவிலக்கி வாளொடு வைகுவேன் யானாக- நாளும் கழிமகிழ் வென்றிக் கழல்வெய்யோ யீயப் 2பிழிமகி ழுண்பார் பிறர். (இ - ள்.) வீரராகிய போர்ப்பிரளயம் கைவளரின் அதனை விலக்கி வாளுடனே அங்கே தங்குவேனாக யான்; நாடோறும் மிக்க உவகையாற் சிறந்த வெற்றியினையும் வீரக்கழலினையுமுடைய வெய்யோனே, நீ கொடுப்ப நினைவு இயைந்து பிழியுமதுவை நுகர்வாராக, வேறு சிலர் எ - று. உண்பாராக, பிறரெனத் தொழிற்படச் சொல்லுக; யான் வாளொடு வைக,உண்பார் பிறரென்றுமாம். (11)
1. தொல்.புறத்.சூ.5,இளம்.மேற். 2. பிழிமதுவு |