மாயிருங் கங்குன் மாமலை நாடனைப் பாய னீவிப் பள்ளிமிசைத் தொடர்ந்தன்று. (இ - ள்.) மிகவும் பெரிய கங்குலிடத்துப் பெரிய வரைநாடனை உறக்கத்தை ஒழிந்து சயனத்திலே பற்றியது எ-று. (வ - று.) யானை தொடருங் கொடிபோல யானுன்னைத் தானை தொடரவும் போதியோ - மானை மயக்கரிய வுண்கண் மடந்தைதோ ளுள்ளி இயக்கருஞ் சோலை யிரா. (இ - ள்.) யானையைப்பற்றும் வல்லிபோல நின்னையான் புடைவையைப் பற்றவும் போகின்றாயோ ? மானைமயக்கும் செவ்வரி கருவரி பரந்த மையுண்ட கண்ணையுடைய மடவாள்தன் தோளைக் கருதி உலாவுதற்கரிய சோலையிடத்து இரவுப்பொழுதிலே எ-று. தானே தொடரவும் போதியோ. (18) |